ஜேர்மனியில் திருமண வீட்டில் சோகத்தை ஏற்படுத்திய புயல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் வீசிய புயலில் மரக்கிளை ஒன்று உடைந்து விழுந்ததில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருந்த எட்டு பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் Blankensee என்னும் இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சுமார் 100 பேர் கூடியிருந்தனர்.

அப்போது புயல் காரணமாக பலத்த காற்று வீசியதில், மரக்கிளை ஒன்று உடைந்து நான்கு மீற்றர் உயரத்திலிருந்து கூடியிருந்த விருந்தினர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் மூன்று பெண்களும் நான்கு ஆண்களும் படுகாயம் அடைந்தனர். மற்றொரு ஆணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மருத்துவ உதவிக் குழுவினர் வரவழைக்கப்பட்டு காயமடைந்தோர் சுற்று வட்டாரத்திலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...