1000 முறை அகதிகளை காப்பாற்றிய ஜேர்மன் இளம்பெண்ணுக்கு சிறை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி
353Shares

மத்தியதரைக்கடலில் சிக்கித்தவித்த அகதிகளை மீட்டதற்காக ஜேர்மன் இளம்பெண் ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.

ஜேர்மன் மீட்புப் படகு ஒன்றின் மாலுமியான Pia Klemp (35), தனிப்பட்ட முறையில் 1000 முறை மத்திய தரைக்கடலில் சிக்கித் தவித்த அகதிகளை மீட்டதாக கருதப்படுகிறது.

அவரது இந்த தன்னலமற்ற செயலுக்காக, சட்ட விரோதமாக அகதிகளை கடத்த உதவியதாக, அவர் மீது சிசிலி தீவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதோடு அவரது படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியின் உள்துறை அமைச்சரான Matteo Slavini, தங்கள் நாட்டு கடற்கரையை ஒட்டி பயணிக்க Pia Klempக்கு தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் மனித நேயத்துடன் தானாக முன்வந்து அகதிகளை மீட்கும் Pia Klemp, இந்த பிரச்சினை தொடர்பாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் Pia Klemp மீதான வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி முன் வைக்கப்பட்டுள்ள மனு ஒன்றில், இதுவரை 78,432 பேர் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்