ஜேர்மனியில் ஓரினச்சேர்க்கையாளர் கொலை வழக்கில் மூவர் கைது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

குடிபோதையிலிருந்த மூன்று பேர், ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது வலது சாரிக் கொள்கைகளுக்கும் இந்த குற்றத்திற்கும் சம்பந்தமில்லை என வாதிடப்பட்டது.

Chemnitz நகருக்கருகிலுள்ள Aue நகரில்27 வயது ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரை அடித்துக் கொன்றதாக மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் Terenc H (26) என்பவருக்கு 14 ஆண்டுகளும், Stephan H (22) மற்றும் Jens H (22)ஆகிய இருவருக்கும் 11 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையிலிருந்த அந்த மூவரும் Christopher W என்பவரை அடித்து உதைத்ததோடு

அவரது தலையை பிடித்து சுவரில் மோதியிருக்கிறார்கள்.

அந்த மூவரும் வலது சாரிக் கொள்கைகள் உடையவர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பவர்கள் என்றாலும், அதற்கும் இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் அதன் விளைவாக நிகழ்ந்த மோதல் கொலைக்கு வழிவகுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்