வாடகைக்கு குடியிருப்பதற்கு எந்த நகரம் சிறந்தது, பெர்லினா, லண்டனா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

வாடகைக்கு குடியிருப்பதற்கு எந்த நகரம் சிறந்தது, பெர்லினா, லண்டனா என்பதை விவரிக்கிறது இந்த வீடியோ.

லண்டனில் தனி நபர்களின் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர், திடீரென அதிக வாடகை உயர்வை சந்திக்கும் வாய்ப்புள்ளதோடு, குறுகிய காலத்தில் வெளியேறவும் கேட்டுக்கொள்ளப்படும் சாத்தியங்கள் உள்ள நிலையில், பெர்லின் இந்த விடயங்களில் முற்றிலும் மாறுபடுகிறது.

பெர்லினில் தனி நபர்களின் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர் குறைந்த வாடகை செலுத்துவதோடு, திடீர் வாடகை உயர்வை சந்திக்கும் பிரச்சினை இல்லாததால் நீண்ட காலம் ஒரேவீட்டில் வசிக்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கும் ஒரு பிரச்சினை உள்ளது, அது என்னவென்றால், ரிப்பேர் ஏற்பட்டால் அதற்கான செலவை வாடைக்கு குடியிருப்போரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும், பல்புகள் முதல் மாடுலர் கிச்சன் வரை தாங்களே பொருத்திக் கொள்வதோடு, வீட்டை காலி செய்யும்போது தாங்களே தங்கள் உடைமைகளை பிரித்து எடுத்துச் செல்லவும் வேண்டும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்