டிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை வைத்து ஆபாச படம் எடுத்த ரயில்வே பெண் அதிகாரி

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனில் டிக்கெட் இல்லாமல் பிடிபட்ட பயணிகளை மிரட்டி இரவு நேரத்தில் ரகசியகமாக ஆபாசப்படம் எடுத்த பெண் அதிகாரியை பணி நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜெர்மனியின் ரயில்வே துறையில் பணிபுரியும் தெரசா என்கிற பெண் அதிகாரி, டிக்கெட் இல்லாமல் பிடிபடும் பயணிகள் மீது ஆதிக்கம் செலுத்தியுள்ளார்.

அவர்களை மிரட்டி, இரவு நேரத்தில் காலியாக இருக்கும் ரயில்களில் நடிகர் ஒருவரின் உதவியுடன் ஆபாச படங்களை எடுத்துள்ளார்.

இந்த வீடியோக்கள் அனைத்தும் சமீபத்தில் ஒரு இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதனையடுத்து அதிரடி நடவடிக்கையாக அந்த இளம்பெண்ணை பணிநீக்கம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் எந்த விதத்திலும் குற்றஞ்சார்ந்த நடத்தையை சகித்துக் கொள்ள மாட்டோம் மற்றும் வலுவான வகையில் இதனை கண்டனம் செய்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனை வைத்தே அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers