ஜேர்மன் நிறுவனத்துடன் இந்திய ஸ்டீல் ஜாம்பவானின் இணைப்பு ரத்தானது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்திய ஸ்டீல் ஜாம்பவானான டாடா நிறுவனம் புகழ்பெற்ற ஜேர்மன் ஸ்டீல் நிறுவனம் ஒன்றுடன் இணைவதாக இருந்த திட்டம் ஐரோப்பிய கமிஷனின் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய கமிஷனின் தலையீட்டால் டாடா நிறுவனத்துடன் இணையும் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டதாக ஜேர்மன் ஸ்டீல் ஜாம்பவானான ThyssenKrupp நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் நிறுவனத்துடனான இணைப்பை ஐரோப்பிய கமிஷன் ஏற்றுக்கொள்ளாது என்பதால் இரு நிறுவனங்களும் ஆழ்ந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஜாம்பவானான ArcelorMittal நிறுவனத்துக்கு அடுத்து பெரிய ஐரோப்பிய ஸ்டீல் நிறுவனத்தை உருவாக்க வேண்டும், மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்டீல் நிறுவனத்துக்கு போட்டியாக செயல்படும் நிறுவனங்களில் தாங்களும் ஒருவராக இணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

ஐரோப்பிய கமிஷனின் ஏராளமான கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டும் அது இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதால் திட்டத்தை கிடப்பில் போட்டு விட்ட ThyssenKrupp, தனது லிஃப்ட் உருவாக்கும் தொழிலில் கவனம் செலுத்தப்போவதாக கூறிவிட்டது.

இந்த அறிவிப்பால் பங்குச் சந்தையில் இரு நிறுவனங்களின் பங்குகளுமே மோசமான அடி வாங்கின.

டாடா நிறுவனமும் ThyssenKrupp நிறுவனமும் இணைவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல முக்கிய முடிவெடுக்கும் நிறுவனங்களின் ஒப்புதல் அவசியமாகும்.

ஐரோப்பிய கமிஷன் பல மாதங்களாகவே இந்த இணைப்பு குறித்து ஆராய்ந்து வந்தது. இந்த இணைப்பால் பங்குச் சந்தை போட்டிகளில் பிரச்சினைகள் ஏற்படுமா என்பது குறித்து அது ஆராய்ந்து வந்தது.

எனவே அது குறித்து ஐரோப்பிய கமிஷன் தொடர்ந்து கவலை தெரிவித்து வருவதையடுத்து டாடா நிறுவனமும் ThyssenKrupp நிறுவனமும் இணைவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்