சவுதி வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் ஜேர்மன் இராணுவம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

7 சவுதி வீரர்களுக்கு ஜேர்மனிய இராணுவம் பயிற்சி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளதற்கு சட்டம் இயற்றுபவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த சில ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன், சிரியா, ஈராக் மற்றும் லெபனானில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் மற்றும் சவுதி அரேபியா நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில் ஏமனில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் சவுதி அரசுடன் ஜேர்மன் அரசாங்கம் ஒப்பந்தம் வைத்துள்ளது ஏற்புடையதல்ல என சட்டம் இயற்றுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2016 ஆம் ஆண்டு ஜேர்மனிய பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வான் சவுதிக்கு பயணம் மேற்கொண்டபோது செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும், சவுதி பத்திரிகையாளர் காஷோகி கொலை வழக்கில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக ஜேர்மன் அரசு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்