சுற்றுலா சென்ற இடத்தில் மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்த ஜேர்மன் தந்தை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஸ்பெயின் நாட்டில் Tenerife தீவுப்பகுதியில் அமைந்துள்ள குகையில் ஜேர்மன் நாட்டை சேர்ந்த தாய் மற்றும் அவரது 10 வயது மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணாமல் போன 39 வயது தாய் மற்றும் அவரது 10 வயது மகனின் சடலங்கள் Canary Islands' Tenerife இல் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்டு குகை பகுதியில் அவர்களது சடலங்கள் போடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இவரது 5 வயது மகன் Adeje நகருக்கு அருகில் உள்ள ஒரு மலைப்பகுதியில் நின்று தனியாக அழுதுகொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளான், மேலும் தனது தாய் மற்றும் சகோதரனை கொடூரமாக தந்தை அடித்ததாகவும் , தனது தந்தையிடம் இருந்து தான் தப்பித்து வந்ததாகவும் பொலிசில் தெரிவித்துள்ளான்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக Adeje நகரில் உள்ள குடியிருப்பில் இருந்த 48 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் ஆவார்.

கைது செய்யப்பட்டுள்ள இவர், முறையாக பொலிசிற்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பமாக ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா வந்த இவர்கள் இருவருக்குள்ளும் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

மேலும், தனது குடியிருந்த வீட்டினை குறித்த நபர் பதிவு செய்யவில்லை என Adeje நகர மேயர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

இந்த சம்பவத்திற்கு ஸ்பெயின் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers