ஐரோப்பிய ஒன்றிய அரசியலில் கால் பதிக்கும் ஏஞ்சலா மெர்க்கல்?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

2021ஆம் ஆண்டு தனது பதவியிலிருந்து விலக இருக்கும் ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பதவியை வகிக்க மிகவும் தகுதியுடையவர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான ஜீன் கிளாட் ஜங்கர் தெரிவித்துள்ளார்.

இதனால், அடுத்து ஏஞ்சலா ஐரோப்பிய ஒன்றிய அரசியலில் கால் பதிக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.

அவர் ஒரு மரியாதைக்குரிய மனிதர் மட்டுமல்ல, சிறந்த திறமைசாலியும் கூட என்றார் ஜீன் கிளாட் ஜங்கர்.

தான் பதவி வகிக்கும் 2021 வரையும் முத்திரை பதிக்கும் வகையில் செயல்படுவார் என்றும் அவர் ஏஞ்சலா மெர்க்கலை பாராட்டினார்.

படிப்படியாக தான் அரசியலிலிருந்து விலக இருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஏஞ்சலா மெர்க்கல் அறிவித்திருந்தார்.

ஏற்கனவே ஏஞ்சலா ஐரோப்பிய ஒன்றிய அரசியலில் நுழையலாம் என்ற ஒரு கணிப்பு நிலவும் நிலையில் ஜங்கரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்