இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம்: ஜேர்மன் சேன்ஸலர் கடும் கண்டனம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு பயங்கரமாக வெளிக்காட்டப்பட்டுள்ள மத வெறுப்பும் சகிப்புத்தன்மையின்மையும் ஒருபோதும் வெற்றியடையக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான தாக்குதல் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக கூடிய மக்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது அதிர்ச்சியை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

தேவாலயங்களையும் ஹோட்டல்களையும் குறிவைத்து இலங்கையில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதையடுத்து 200க்கும் மேலானோர் உயிரிழந்ததோடு, ஏராளமானோர் காயமடைந்தனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித அந்தோணியார் தேவாலயம் உட்பட பல இடங்களில் தொடர்ச்சியாக ஆறு குண்டுகளும், பின்னர் சில மணி நேரங்களுக்குப்பின் இரண்டு என மொத்தம் எட்டு இடங்களில் குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் Heiko Maas வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்துடன் தொடர்பிலிருப்பதாகவும், ஜேர்மானியர்கள் யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த இக்கட்டான நிலைமையில் இலங்கைக்கு துணையாக நிற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்