என் புருஷன்தான், எனக்கு மட்டும்தான்: கணவனின் பெற்றோரை காலி பண்ணச் செய்த மனைவி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நீங்கள் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று கூறிய மனைவியின் ஆசைக்கு இணங்கிய கணவன், தங்கள் உறவுக்கு தடையாக இருந்த தனது பெற்றோரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஜேர்மனியை உலுக்கியுள்ளது.

Fuerth என்னும் பகுதியைச் சேர்ந்த இங்கோ என்னும் 26 வயதுடைய அந்த நபர், தங்கள் உறவை எதிர்த்த தனது தாயை சுத்தியலால் அடித்துக் கொன்றிருக்கிறார்.

பின்னர் தனது 70 வயதுடைய தந்தையையும் அவர் கொலை செய்திருக்கிறார்.

இங்கோவையும் அவரது மனைவியையும் பொலிசார் கைது செய்து விசாரித்ததில், தனது கணவர் தனக்கு மட்டும்தான் சொந்தம், அவரது தாய் தந்தையர் அவரை உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காக அவர்களை கொலை செய்ய தூண்டியதாக இங்கோவின் மனைவி தெரிவித்துள்ளார்.

கொலை செய்த தங்கள் பெற்றோரின் உடலை அந்த ஜோடி தங்கள் வீட்டுக்கு பின்னாலேயே புதைத்துள்ளனர்.

அதோடு நிற்காமல் தங்கள் பெற்றோர் காணாமல் போனதாக அந்த ஜோடி புகார் அளித்ததோடு, அவர்களை தேட நிதி உதவி அளிக்குமாறும் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

விசாரணை அதிகாரிகள் பல வாரங்களுக்குப்பின் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் கண்டுபிடித்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்