ஜேர்மன் நதியில் டன் கணக்கில் இறந்து கிடந்த மீன்கள்: பொலிசார் எச்சரிக்கை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியில் Schozach நதியில் இரசாயன கசிவு காரணமாக டன் கணக்கில் மீன்கள் இறந்துள்ளன.

ஒரு மான் இறந்துபோனதற்கும் இந்த இரசாயன கசிவுதான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் விலங்கினங்கள் நதிக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கப்பல் நிறுவனத்திலிருந்து கசிந்த இரசாயனங்கள் தண்ணீரில் கலந்துள்ளது. இதனால் அருகில் உள்ள ஏரிகளும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

. விபத்து ஏற்பட்டபோது நதியில் ஆயிரம் லிட்டர் நச்சு இரசாயனங்கள் கருதப்பட்டன.

ஆரம்ப நீர் பகுப்பாய்வுகளில் கிளைகோல், எலிஎலின் கிளைகோல் மற்றும் ஆல்கஹால் ஆகியவை அதிக அளவு அடர்த்தியாக காணப்படுகிறது, அதே போல் அம்மோனியாவின் சாதாரண அளவு அதிகமாகும். இதனால், நீரானது உமிழ்நீக்கம் செய்யப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்