ஜேர்மனியில் ரயிலைக் கவிழ்க்க சதி: அகதி ஒருவர் ஆஸ்திரியாவில் கைது!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் இருமுறை ரயிலைக் கவிழ்க்க சதி செய்த ஒரு ஈராக் அகதியை ஆஸ்திரிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஈராக்கைச் சேர்ந்த அந்த 42 வயது அகதி, ஜேர்மனியின் அதிவேக ரயில்களை இரு முறை கவிழ்க்க முயற்சி செய்துள்ளார்.

சம்பவ இடத்தில் குற்றவாளி விட்டுச் சென்ற துப்புக்களை பயன்படுத்தி அவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த அக்டோபரில் Nurembergகுக்கும் முனிச்சுக்கும் இடையில் பயணிக்கும் ஒரு ரயில் மற்றும் டிசம்பரில் Karlshorstஇல் ஒரு ரயில் என அவர் இரண்டு முறை ரயில்களைக் கவிழ்க்க முயற்சி செய்துள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் கொடி ஒன்றும், தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்றும் சம்பவ இடங்களில் கிடைத்தன.

அந்த கடிதத்தை அச்சடித்த அச்சுக் கருவி எங்கு வாங்கப்பட்டது என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கிய பொலிசார் வியன்னா வந்து சேர்ந்தனர்.

வியன்னாவில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் தங்கியிருந்த அந்த நபரை திங்களன்று பொலிசார் கைது செய்தனர்.

அந்த நபருக்கு 20 ஆண்டுகள் முன்பு ஆஸ்திரியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டதாக வியன்னா அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட நபர் பேஸ்புக்கில் இஸ்லாமிய தீவிரவாத தாக்குதல்களை புகழ்ந்து இடுகை இடுபவர் என்றும் நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பழி வாங்க அழைப்பு விடுத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers