தொழில்நுட்ப கோளாறால் ஜேர்மனியில் 50 விமானங்கள் ரத்து!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியின் ஃப்ராங்பர்ட் விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 50 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

விமான போக்குவரத்து கட்டுப்பாடு மென்பொருள் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதையடுத்து 46 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் 4,500 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃப்ராங்பர்ட் விமான நிலையம் ஜேர்மனியிலேயே பெரிய விமான நிலையமாகும். பயணிகள் புறப்படுவதற்குமுன் தகவல்களை விசாரித்து பின்னர் விமான நிலையம் புறப்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்