நாட்டையே உலுக்கிய கொலை வழக்கு! நான் குற்றவாளி அல்ல என்கிறார் சிரிய அகதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

நாட்டையே கொந்தளிக்கச் செய்து, ஜேர்மன் சேன்ஸலரின் பதவியையே ஆட்டம் காண வைத்த ஜேர்மானியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிரிய அகதி, தான் குற்றவாளி அல்ல என மறுத்துள்ளார்.

சிரிய அகதியான Alaa Sheikhi (23), ஜேர்மானியரான Daniel Hillig (35)ஐ கத்தியால் குத்திக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த கொலையை அடுத்து வலது சாரியினர் ஜேர்மனியின் Chemnitz நகரில் நடத்திய போராட்டங்களால் நாடே ஸ்தம்பித்தது.

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், அகதிகள் பிரச்சினையின்போது நாட்டுக்குள் அகதிகளை அனுமதித்ததுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டது.

இத்தனைக்கும் பிறகு Sheikhiயின் சார்பில் பேசியுள்ள அவரது வழக்கறிஞர்கள், அவர் குற்றவாளி அல்ல என மறுத்துள்ளனர்.

சிரிய அகதி மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய ஈராக்கைச் சேர்ந்த Farhad A. (22) என்பவரை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்