Brexit: பிரித்தானியா இல்லாத ஐரோப்பிய ஒன்றியம் அழகிழந்து போகும்! ஜேர்மன் பிரதிநிதி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரித்தானியா இல்லாத ஐரோப்பிய ஒன்றியம் அழகிழந்து போகும் என ஜேர்மன் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான Hans-Olaf Henkel எச்சரித்துள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுமானால் கவர்ச்சிகரமான ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தை பின்னர் காண முடியாது என்றார் அவர்.

பிரித்தானியா எப்போதுமே போட்டியை ஊக்குவிக்கக்கூடியதாக, கடன் விடயத்தில் பொறுப்புள்ளதாக இருந்திருக்கிறது.

அது போய்விட்டால், கடனும் வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகும் என்கிறார் அவர். பிரித்தானியா இல்லாத ஐரோப்பிய ஒன்றியம், ஆரோக்கியமான போட்டிகளற்ற, ஏழ்மையான மற்றும் கவர்ச்சியற்றதாகி விடும் என எச்சரிக்கிறார் Hans-Olaf Henkel.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers