மொத்த ஜேர்மனியின் கவனத்தையும் ஈர்த்த இளம்பெண் காணாமல் போன வழக்கு! தேடுதல் வேட்டையை நிறுத்திய பொலிஸ்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் ஒரு இளம்பெண் காணாமல்போன வழக்கு மொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், அவளது அக்காவின் கணவர் கைது செய்யப்பட்டதையடுத்து பொலிசார் தேடுதல் வேட்டையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

ஜேர்மனியைச் சேர்ந்த Reusch என்ற இளம்பெண் காணாமல்போன நிலையில், பொலிசார் அவளை தேடி வந்தனர்.

20 பொலிசார், பொலிஸ் நாய்கள் உதவியுடன் Brandenburg பகுதியிலுள்ள Rieplos என்ற பகுதியில் அமைந்துள்ள 50 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள காடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியும் கார் டயர் தடங்களை தவிர வேறு எந்த தடயமும் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டோர் பொலிசாருக்கு துப்பு கொடுத்ததை தொடர்ந்து இந்த தேடுதல் வேட்டை தொடங்கியது.

என்றாலும் தேடுதல் வேட்டையில் எந்த பலனும் இல்லாததால், நேற்று முன்தினம் பொலிசார் தேடுதலை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இனி Reuschஐ உயிருடன் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால், பொலிசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் Reuschஇன் பெற்றோர், அவளுக்கு ஒரு ஆண் நண்பன் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதை அவர்கள் பொலிசாரிடம் தெரிவிக்காமல், பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளதற்கு பொலிசார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் Reusch காணாமல் போன அன்று அவரது வீட்டில் அவருடன் அவரது அக்காவின் கணவரான Florian மட்டுமே இருந்ததாக மொபைல் போன் அழைப்புகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் Florian கைது செய்யப்பட்டும் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது பொலிசார் அவரது காரை சோதனையிட்டதில், காரில் Reuschஇன் தலைமுடிச் சுருள்களும், அவரது வீட்டிலிருந்து காணமல் போன ஒரு போர்வையிலுள்ள நூல் துண்டுகளும் கிடைத்துள்ளன.

இதனால் Florian மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு போதைப்பொருள் வியாபாரமும் இருப்பதாகவும் Reuschஇன் பெற்றோர் தெரிவித்துள்ளதையடுத்து வழக்கு மேலும் குழப்பமான நிலையை அடைந்துள்ளது.

வழக்கு மொத்த ஜேர்மனியின் கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், ஜேர்மன் பொலிசார் வழக்கை எதிர் கொள்ள தயாராக இல்லை என்றும், மிகவும் மெதுவாக நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் பொலிசார் மீது விமர்சனங்கள் குவிகின்றன.

அதேபோல், அமெரிக்காவில் உள்ளதுபோல் ஆம்பர் எச்சரிக்கை விடும் முறையை கொண்டு வரவேண்டும் என்றும் மக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

ஆம்பர் அலர்ட் என்பது, யாராவது காணாமல் போனால், அவர்களைக் குறித்த தகவல்களை உடனடியாக தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் மொபைல் போன்களிலுள்ள சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலம் பொலிசார் பயனுள்ள தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் ஒரு முறையாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers