பதவிக்கு வரும் முன்னரே சர்ச்சைப் பேச்சினால் சிக்கிய பிரபலம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்குப்பின் பின் ஜேர்மனை ஆளுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் தனது சர்ச்சைப் பேச்சினால் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார்.

ஏஞ்சலா மெர்க்கலின் ஆதரவாளரும் CDU கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான Kramp-Karrenbauer (56) திருநங்கைகளை கேலி செய்து பேசியதற்காக சிக்கலுக்குள்ளாகியிருக்கிறார்.

கார்னிவல் நிகழ்ச்சிகளின்போது அரசியல்வாதிகள் வேடிக்கையாக பேசுவது வழக்கம். அப்படி வேடிக்கையாக பேசுவதாக கருதி Kramp-Karrenbauer பேசிய ஒரு விடயம்தான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக, இருபாலரும் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளை விமர்சித்து ஜோக் ஒன்றைக் கூறினார் Kramp-Karrenbauer.

இடது சாரிகள் ஊக்குவித்துவரும் இருபாலரும் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளைக் குறித்து ஜோக்கடிக்கும்போது அவர் செய்த விமர்சனம், திருநங்கைகளை கிண்டல் செய்வதுபோல் அமைந்துள்ளதாக பிற கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய கழிவறைகள், சிறுநீர் கழிக்கும்போது உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதா, அல்லது நின்றவாறே சிறுநீர் கழிப்பதா என தீர்மானிக்க இயலாத ஆண்களுக்கானவை என்றார் Kramp-Karrenbauer.

அவரது விமர்சனம் ஜேர்மனியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெர்லின் மேயர் Klaus Lederer உட்பட பல அரசியல்வாதிகள் Kramp-Karrenbauerக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்