சிறிய ஓட்டையில் சிக்கித்தவித்த எலியை மீட்க நீண்ட நேரம் போராடிய அதிகாரிகள்: வைரலான வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in ஜேர்மனி

ஜேர்மனில் பாதாள ஜாக்கடைக்கு வைக்கப்பட்டிருந்த மூடியின் சிறிய துளையில் சிக்கிக்கொண்ட எலியை பத்திரமாக பணியாளர்கள் மீட்கும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஜேர்மன் நகரமான பென்சைமில், மீட்பு பணியாளர்கள் வினோதமான அழைப்பைப் பெற்றனர். அதில், எடை அதிகம் கொண்ட எலி ஒன்று பாதாள சாக்கடைக்கு அடைக்கப்பட்டிருக்கும் மூடியின் மேல் உள்ள சிறிய துளையில் சிக்கி கொண்டதாக தெரிவித்தனர்.

அதிலிருந்து மீள முடியாமல் அந்த எலியும் நீண்ட நேரம் போராடியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஒரு மனிதனை மீட்பதனை போலவே அந்த எலியை மீட்கும் பணியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இதற்காக ஏன் இந்த அளவிற்கு சிரமப்படுகிறீர்கள் என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். மனிதனை விட மிருகங்கள் அதிக நன்றியுடன் இருக்கின்றன என அங்கிருந்த அதிகாரி செஹர் அதற்கு பதிலளித்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.

இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் பலரும் அதிகாரிகளை பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers