ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்! பிரித்தானியர் கைது

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் தீவிரவாத தாக்குதல் நடத்தும்படி ஒருவரைத் தூண்டியதாக பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் Arthur's Hill பகுதியைச் சேர்ந்த Fatah Mohammed Abdullah (33)மீது ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தினுள் காரை செலுத்தி தாக்குதல் நடத்தும்படி தூண்டியது, மக்களை மாமிசம் வெட்டும் கத்தியால் தாக்கத் தூண்டியது மற்றும் வெடி பொருட்களைப் பயன்படுத்தி தாக்கத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் தீவிரவாத தடுப்பு பொலிசார் மற்றும் ஃபெடரல் குற்றவியல் பொலிசார் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையை அடுத்து Abdullahமீது இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

GOOGLE

Abdullah இன்று Westminster நீதிபதிகள்முன் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.

Abdullahவின் தாக்குதல் திட்டம் விசாரணை அதிகாரிகளால் தவிர்க்கப்பட்டதாக பிரித்தானிய பொலிஸ் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Abdullah மீது தீவிரவாத சட்டம் பிரிவு 59இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers