Brexit நடைபெறாது! அடித்துக் கூறும் ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பிரெக்சிட் நடைபெறாது என அடித்துக் கூறுகிறார்.

ஏஞ்சலா மெர்க்கல் சார்ந்த CDU கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Jürgen Hardt, மீண்டும் பிரெக்சிட் தொடர்பாக ஒரு வாக்கெடுப்பு நடைபெறும் என்று நம்புவதாக தெரிவிக்கிறார்.

அப்படி நடக்கும் பட்சத்தில் மீதியிருக்கும் மக்களும் பிரெக்சிட் வேண்டாம் என்றே வாக்களிப்பார்கள் என்றும், அப்படியென்றால் பிரெக்சிட் நடைபெறாது என்றும் கூறுகிறார் அவர்.

தெரஸா மே பிரெக்சிட் பேச்சு வார்த்தைகளைக் கையாளும் விதத்தை கடுமையாக சாடியுள்ள Hardt, ஒப்பந்தமின்றி நிறைவேறும் பிரெக்சிட்டை தவிர்க்கும் வகையில், அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்களுக்கும் போதுமான நேரம் அளிப்பதற்காக மார்ச் 29 பிரெக்சிட் திகதியை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஜேர்மன் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த Hardt, பிரெக்சிட் நடக்காது, இன்னொரு வாக்கெடுப்பு நடைபெறப்போகிறது, மீதமிருப்பவர்களும் பிரெக்சிட் வேண்டாம் என வாக்களிக்கப்போகிறார்கள் என்கிறார்.

பிரெக்சிட் நாள் வரையில் தொடர்ந்து பொருளாதார மற்றும் அரசியல் சிக்கல்கள் இருக்கும் என்கிறார் அவர்.

தற்போது பிரதானமானவையாக இருக்கும் இரண்டு கட்சிகளும் காணாமல் போய் புதிய அரசியல் கட்சிகள் உருவாகும் என்கிறார் Hardt.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers