பிரெக்சிட் கோமாளிகள்! கடுமையாக விமர்சிக்கும் பிரபல நடிகர்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பிரெக்சிட் கோமாளிகள் எப்போது பொறுப்பெடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று காரசாரமாக கேள்வி எழுப்புகிறார் ஜேர்மன் - ஆஸ்திரிய நடிகரான Christoph Waltz.

பிரெக்சிட் குறித்து தான் கடும் விரக்தியில் இருப்பதாக தெரிவித்துள்ள நடிகர் Christoph Waltz, பிரெக்சிட் வாக்கெடுப்பிற்கு பின்னால் இருக்கும் கோமாளிகள் எப்போது உண்மையில் பொறுப்பெடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட்டுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தனது கருத்துக்களை அவ்வபோது தெரிவித்து வரும் அவர் தற்போது மீண்டும் காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்பு லண்டனில் வசித்து வந்த Waltz, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவது குறித்த தனது அணுகுமுறை, விரக்தியையும் தாண்டிய ஒரு மன நிலைமையை கொடுத்துள்ளதாக தெரிவிக்கிறார்.

பெயர் எதுவும் குறிப்பிடாமல் பிரெக்சிட்டின் பின்னணியிலிருப்போரை கோமாளிகள் என சாடியுள்ள அவர், அவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

என்னுடைய விரக்தியை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று கூறும் Waltz, பிரெக்சிட்டை தூண்டியவர்கள் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே என்கிறார்.

முன்பு அவர் பிரெக்சிட் நிகழ முக்கிய காரணமாக இருந்த Farage, பிறகு அதிலிருந்து பின்வாங்கியதையடுத்து, மூழ்கும் கப்பலை விட்டு விட்டு தப்பியோடிய முதல் எலி என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த தலைமை எலி வெளியேறியதை ஏதோ ஹீரோ வெளியேறுவது போல் காட்ட முயற்சித்தார்கள், ஆனால் அது உண்மையில் தோல்வியை ஒப்புக்கொள்வதாகும்.

எலிகளைப்போல தனது வாலை பின்னங்கால்களுக்குள் சுருட்டி வைத்துக் கொண்டு, மற்றவர்கள் சிக்கிக் கொண்டு கஷ்டப்படட்டும், நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போவோம் என்று மூழ்கும் கப்பலை விட்டு விட்டு அவர் ஓடி விட்டார் என்கிறார் Waltz.

தாங்கள் தொடங்கிய ஒரு விடயத்திற்காக நிற்க முடியாத இவர்கள் எவ்வளவு இழிவானவர்கள் என்பது இதிலிருந்து நன்றாக தெரிகிறது என்றார் அவர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்