விடைபெற்றார் ஜேர்மன் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் தன்னுடைய பேஸ்புக் சமூகவலைதளத்தை பின்பற்றுபவர்களுக்கும், தனது ஆதரவாளர்களிடமும் விடைபெறுவதாக அறிவித்து நன்றி தெரிவித்துள்ளார்.

நான் இனிமேல், CDU கட்சியின் தலைவர் அல்ல என்றும் ஆர்வமுள்ளவர்கள் இன்னும் அவரது பணியை தொடர்ந்து பின்பற்ற முடியும் என்றும் கூறியுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாகவும், இதுவரை எனது பேஸ்புக் பக்கத்திற்கு ஆதரவு அளித்து வந்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

நான் CDU கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிக்க முடியாத காரணத்தால் எனது பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்துவதை நிறுத்தப்போகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் என் வேலையை தொடர நான் விரும்புகிறேன், சான்சிலராக வேலை செய்கிறேன். நீங்கள் மத்திய அரசாங்க பக்கத்தில் அல்லது Instagram பக்கத்தில் என்னை பின்பற்ற முடியும்.

மெர்க்கலின் பேஸ்புக் பக்கத்தினை 2.5 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். மெர்க்கல் தனது சான்சிலர் பணிக்காலம் முடியும்வரை பதவியில் நீடிப்பேன் என்று தெரிவித்திருந்தார், ஆனால் 2021 ஆம் ஆண்டில் முடிவடையும் முழு காலவரையையும் அவர் நிறைவேற்றுவாரா என்பது தெளிவாக தெரியவரவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers