இரண்டாம் உலகப்போரில் படுகொலை செய்யப்பட்ட மக்கள்: நினைவுகூர்ந்த ஜேர்மன்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் இரண்டாம் உலகப்போரின் போது மக்கள் படுகொலை செய்யப்பட்டு இறந்துபோனதை நினைவுகூறும் விதமாக Holocaust Remembrance Day இன்று ஜேர்மன் மக்களால் அனுசரிக்கப்பட்டது.

வெளியுறவு மந்திரி ஹீக்கோ மாஸ் கூறியதாவது, Holocaust என்பது பேரழிவு ஆகும். முகாம்களில், இளம் ஜேர்மன் யூதர்கள், முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த காலத்தின் பிற்போக்குத்தனமான குற்றங்கள் ஒவ்வொரு புதிய தலைமுறையினருக்கும் ஒரு எச்சரிக்கை மற்றும் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் போது ஆசுவிட்ஸ்-பிர்கெனோவில் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல், பெரும்பாலான யூதர்கள் கொல்லப்பட்டனர்.

நாஜி படை பல போலந்து கைதிகளை அங்கு நடத்தியது, யுத்தம் வெடித்தபோது ஒரு மரண முகாமாக மாற்றப்பட்டது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்