தினம் தினம் செத்து பிழைத்துக்கொண்டிருந்தாள்...அதனால் மனைவியை கருணை கொலை செய்தேன்: கணவன் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

84 வயதான ஜேர்மனியர் தனது மனைவியை கருணை கொலை செய்தது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

dementia( அறிவாற்றல் இழப்பு) பாதிப்பால் இருந்த மனைவி, இறக்க வேண்டும் என விரும்பியதால் கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு தனது 57 வயது மனைவியை 84 வயது கணவர் கொலை செய்துள்ளார். தனது மனைவிக்கு தூக்க மாத்திரையை கொடுத்து கொலை செய்துவிட்டு தனது மகன்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

மகன்கள் வீட்டுக்கு வந்து பார்க்கையில், தாய் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார், அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டார். விசாரணையில், கணவர் தூக்க மாத்திரை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

அவர் நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது மனைவி அறிவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டிருந்தாள், தினம் தினம் செத்து பிழைத்துக்கொண்டிருந்த அவள், நான் இறந்துபோக வேண்டும் என என்னிடம் கூறினாள்.

அவள் துடிப்பதை பார்க்க முடியாத காரணத்தால் கருணை கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers