காணாமல் போன ஜேர்மன் பெண் சடலமாக அவுஸ்திரேலியாவில் மீட்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

காணாமல் போன ஜேர்மன் சுற்றுலாப்பயணி ஒருவரின் உடல் அவுஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற Monika Billen (62), தனது ஹோட்டல் அறைக்கு திரும்பாததால், ஹோட்டல் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் Monikaவைக் கண்டுபிடிக்க முடியாததால் தேடும் முயற்சி கைவிடப்பட்டது.

பின்னர் Monikaவின் மொபைல் நிறுவனத்தார் அளித்த தகவலின்பேரில் மீண்டும் ட்ரோன்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் Emily Gap என்னும் இடத்தில், ஒரு மரத்தின் கீழ் அவரது உடல் கிடப்பது ட்ரோன் கெமரா மூலம் தெரியவந்தது.

Monikaவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் அதிகாரி ஒருவர், ராப்பகலாக அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்ட குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers