அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நாஸி ஒருங்கிணைப்பாளர் ஜேர்மனியில் மரணம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஆயிரக்கணக்கான யூதர்களின் இனப்படுகொலையுடன் தொடர்புடையவர் என தெரியவந்ததால் அமெரிக்காவிலிருந்து ஜேர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட Jakiw Palij (95) ஜேர்மனியில் உயிரிழந்தார்.

முன்னாள் நாஸி ஒருங்கிணைப்பாளரான Palij, ஜேர்மனியின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த போலந்தில் சித்திரவதை முகாம் ஒன்றின் பாதுகாவலராக இருந்தவர்.

ஏராளமான யூதர்கள் உயிரிழந்த அந்த சித்திரவதை முகாமில், 1943ஆம் ஆண்டு ஒரே நாளில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த யூதர்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தும் முக்கிய பங்காற்றியதாக அமெரிக்க அதிகாரிகள் Palij மீது குற்றம் சாட்டினர்.

அகதி என்று பொய் கூறி அமெரிக்கா வந்து, அமெரிக்கக் குடியுரிமையும் பெற்றிருந்த Palij, உண்மை வெளியானதால் குடியுரிமை இழந்தார்.

ஃபெடரல் நீதிபதி ஒருவர் Palijஇன் குடியுரிமையை பறிக்க உத்தரவிட்டதையடுத்து 2003 முதல் அவர் நாடற்றவராக அறிவிக்கப்பட்டார்.

ஜேர்மானியரான அவர் ஜேர்மனிக்கு நாடு கடத்தப்படுவதிலும் சட்டச் சிக்கல்கள் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் அவரை ஏற்றுக் கொள்ள ஜேர்மனி முடிவு செய்தது.

அந்த நேரத்தில் ஒரு வீல் சேரில் Palij ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது பெரிய அளவில் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இவ்வளவு காலம் பல அதிபர்கள் அவரை நாடு கடத்த இயலாத நிலையில், டிரம்ப் அவரை நாடு கடத்தியதால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில் Ahlen நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்றில் Palij உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்