இரவில் நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபரை கண்டுபிடிக்க திணறும் பொலிஸ்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் இரவு நேரத்தில் நிர்வாணமாக சைக்கில் ஓட்டி சென்ற நபரை சில மாதங்கள் ஆகியும் கண்டுபிடிக்கமுடியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Kiel நகரில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் இரவு 11.30 மணியளவில் நபர் ஒருவர் நிர்வாணமாக, காலில் காலணி மட்டும் அணிந்து கையில் நெருப்புடன வேகமாக சைக்கில் ஓட்டி சென்றுள்ளார்.

ஒரு மணிநேரத்திற்கு 47 கிலோ மீற்றர் தொலைவில் சென்றுள்ளார். இந்த காட்சிகள் நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரொவில் பதிவாகியுள்ளது.

இந்த நபரை கண்டுபிடிக்க பல முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்