போக்குவரத்து விளக்குகளில் நடனமாடும் ராக் ஸ்டார்! ஜேர்மனியின் நகரில் பாதசாரிகளை கவர புதிய யுக்தி

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனியின் Friedberg நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளில், மறைந்த பிரபல ராக் இசைக்கலைஞர் எல்விஸ் பிரெஸ்லேயின் நடன அசைவுகள் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் பிரபல ராக் இசைக்கலைஞராக விளங்கியவர் எல்விஸ் பிரெஸ்லே. இதனால் ராக் அண்ட் ரோலின் கிங் என்று அழைக்கப்பட்ட எல்விஸ், 1958-60 காலகட்டத்தில் அந்நாட்டு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

அப்போது மேற்கு ஜேர்மனியின் Friedberg நகரில் எல்விஸ் அடைக்கலம் பெற்றார். அதே சமயம் Bad Nauheim நகரிலும் இவரது தொடர்பு இருந்தது. இதனால் இரு நகரங்களுக்குமான முக்கிய நபராக இவர் இருந்தார்.

அதன் விளைவாக இரு நகரங்களில் இருந்த கிளப்களில் இவரது பாடல்கள் பிரபலமாகின. எனவே தற்போது பாதசாரிகளை கவரும் வகையில், Friedberg நகரில் உள்ள போக்குவரத்து சிக்னல் விளக்குகளில் எல்விஸின் நடன அசைவு, பாடுவது போன்றவை இடம்பெற்றுள்ளது.

அதாவது, சிக்னலின் போது சிவப்பு விளக்கு எரியும்போது கையில் மைக்குடன் எல்விஸ் பாடுவது தோன்றும். பச்சை விளக்கு எரியும்போது அவரது நடனமாடுவது தோன்றும்.

இது பாதசாரிகளை வெகுவாக கவரும் என்று கூறப்படுகிறது. மேலும், சுற்றுப்பயணிகளும் இதனை வியந்து பார்ப்பார்கள் என்று உள்ளூர் அரசியல் பிரமுகர் மரியான் கோட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்கப்பட்டபோது, அவர்கள் இதன் பாதுகாப்பை உறுதி செய்தனர். பின்னர் இது சிறந்த முயற்சி என்றும், பாதசாரிகள் இதனைக் கண்டு கவனமுடன் சாலையை கடந்து செல்வார்கள் என்றும் கூறி அனுமதி வழங்கினர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்