ஒரே நேரத்தில் ஜேர்மனி உட்பட நான்கு நாடுகளில் 90 பேர் கைது: மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி உட்பட நான்கு ஐரோப்பிய நாடுகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தொடர் ரெய்டுகளில் மாஃபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் என கருதப்படும் 90 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேர்மனி, இத்தாலி,பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகாரிகள் Ndrangheta என்னும் குற்ற அமைப்பைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கெதிராக தொடர் ரெய்டுகளை நடத்தினர்.

இந்த கும்பல் போதை மருந்து கடத்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம், வன்முறை மற்றும் லஞ்சம் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில், அதிகாலையில் நடத்தப்பட்ட ரெய்டுகளில் பலர் கைது செய்யப்பட்டதாக ஃபெடரல் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கியமாக நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் பவேரிய எல்லைகளில் அமைந்துள்ள North Rhine-Westphalia பகுதியைக் குறிவைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

கைது சம்பவங்கள் தொடர்பாக Hagueஇல் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளதால், தற்போதைக்கு வேறு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்