ஜேர்மனியின் தங்க கிறிஸ்துமஸ் மரம்: ஐரோப்பாவிலேயே விலையுயர்ந்த மரம் இதுதான்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

உலகிலேயே உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியது யார் என்ற போட்டியில் இருந்த ஜேர்மனி தற்போது ஐரோப்பாவிலேயே விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியுள்ளது.

முனிச் தங்க நிறுவனமான Pro Aurum, விழாக்கால அலங்கார காட்சிப் பொருளாக 2,018 தங்க நாணயங்களைக் கொண்டு ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி, அதன் மீது ஒரு பிரகாசிக்கும் தங்க நட்சத்திரத்தையும் அமைத்துள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் மரத்தின் மதிப்பு 2.3 மில்லியன் யூரோக்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பார்ப்பதற்கு அவை தங்க காகிதத்தால் பொதியப்பட்ட சாக்லேட்டுகள் போல காணப்பட்டாலும், உண்மையில் அவை 20 அவுன்ஸ் எடையுள்ள தங்க நாணயங்களாகும்.

ஆக, மொத்தத்தில் 63 கிலோ சுத்த தங்கம் இந்த மரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று மீற்றர் உயரமான இந்த கிறிஸ்துமஸ் மரத்தை அமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆனது.

இந்த கிறிஸ்துமஸ் மரம் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்