உலகிலேயே உயரமான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியது யார், இலங்கையா, ஜேர்மனியா?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

18 மீற்றர் உயரமுள்ள செயற்கை கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை உருவாக்கியிருக்கும் ஜேர்மனி, உலக சாதனையை உடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் ஏற்கனவே 2016ஆம் ஆண்டு இலங்கை, 73 மீற்றர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கிவிட்ட நிலையில் ஜேர்மனியின் மரம் எப்படி உலக சாதனை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது என்பது தெரியவில்லை.

ஜேர்மனியின் கிறிஸ்துமஸ் மரம் பியர் பாட்டில்களை அடுக்கி வைக்க பயன்படுத்தப்படும் பெட்டிகளால் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 2,790 பெட்டிகள் அடுக்கப்பட்டு 17.88 மீற்றர் உயரத்தை அந்த மரம் அடைந்துள்ளது.

இந்த கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியவர்கள், வறுமையிலிருக்கும் குழந்தைகள் மற்றும் ஜேர்மனியில் தன்னார்வலர்களின் பங்கு ஆகியவற்றை நோக்கி உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த மரத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த மரம் ஜேர்மனியின் Gera நகரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு கொழும்பில் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் ஸ்டீல் மற்றும் ஒயர் பிரேம்களால் உருவாக்கப்பட்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான நிஜ பைன் கோன்களாலும் 600,000 LED பல்புகளாலும், அதன் உச்சியில் 6 மீற்றர் உயரமுள்ள பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அது இன மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நிறுவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்