ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒரு மணி நேரத்திற்குள் அதை இழந்த சம்பவம் நடைபெற்றது.

ஜேர்மனியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் டிரைவிங் டெஸ்டை வெற்றிகரமாக முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, பொலிஸ் அதிகாரிகள் அதே சாலையில் வாகனங்களின் வேகத்தை கருவி ஒன்றின் உதவியுடன் சோதித்துக் கொண்டிருந்தனர்.

அந்த இளைஞர் அந்த சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

பொலிசார் தங்கள் அறிக்கையில், சில விடயங்கள் நிரந்தரமாக நீடிக்கின்றன, ஆனால் வேறு சில விடயங்கள் ஒரு மணி நேரம் கூட நிலைப்பதில்லை என்று எழுதினர்.

அந்த இளைஞருடன் அவரது காரில் மேலும் நான்கு இளைஞர்கள் இருந்தனர்.அவர்கள் முன் சாகஸம் செய்வதற்காக அவர் அப்படி செய்திருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

தற்போது அந்த இளைஞருக்கு பெரிய தொகை ஒன்று அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நான்கு வாரங்கள் வாகனம் ஓட்ட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு மீண்டும் பணம் செலவளித்து பயிற்சி எடுத்த பின்னரே அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்