2019 ஆம் ஆண்டுக்கான ஜேர்மனின் வரவு - செலவு திட்டம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

2019 ஆம் ஆண்டுக்கான ஜேர்மனிய வரவு செலவு திட்டத்தில் இராணுவத்துக்கு அதிகம் செலவழிக்க அரசு முடிவு செய்துள்ளது.

15 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், பாராளுமன்றத்தில் ஜேர்மனியின் வரவு செலவு திட்டம் வெளியிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட செலவினங்களில் 356.4 பில்லியன் யூரோக்கள் மொத்த செலவு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் புதிய கடன்களைக் கொண்ட ஒரு சமநிலை வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்தது. அதாவது, ஸ்க்வார்ஜ் பூஜ்யம் (schwarze Null) அல்லது (black zero) அல்லது கருப்பு பூச்சியம்" கொள்கை என்று அழைக்கப்படுகிறது.

இராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் குடும்பங்கள் மீது அதிக தொகையினை செலவழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,

புதிய துறைமுகங்கள் மற்றும் போக்குவரத்து ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு 43.23 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது . 2018 ஆம் ஆண்டில் இது 38.5 பில்லியன் யூரோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது,

வரவு செலவுத் திட்டத்தின் மிகப்பெரும் பகுதியானது, தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இது அடுத்த ஆண்டு 145.3 பில்லியன் யூரோக்களாக ஒதுக்கப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கு மாதாந்த குழந்தை நலன் செலுத்தும் தொகையும் உயரவுள்ளது.

வரவுசெலவுத்திட்டத்தின்படி ஜேர்மனியின் பல அமைச்சகங்களில் 8,750 பதவிகளிலும் கணிசமான எண்ணிக்கையில் வேலைகள் அதிகரிக்கும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்