வீட்டில் தீப்பற்றியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த நபர்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த நபர் ஒருவர் உணவு பொருளை தீயில் வேக வைத்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

மேற்கு ஜேர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் நேற்று தனது வீட்டு சமையலறையில் உணவை நெருப்பில் வேக வைத்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்ட நிலையில் அப்படியே மயங்கி விழுந்துள்ளார்.

அவர் நெருப்பில் வைத்த உணவு கருகி புகையாக ஜன்னல் வழியாக வெளியேறியது.

புகையை பார்த்து அவர் வீட்டுக்கு வந்த அருகில் வசிப்பவர்கள் நபர் மயங்கி விழுந்ததை கண்டதோடு, புகை மண்டலத்தை கண்டு தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் நெருப்பை அணைத்ததோடு, மயங்கி கிடந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

குறித்த நபர் மட்டும் நெருப்பில் உணவை வைக்காமல் இருந்திருந்தால் புகை வந்திருக்காது, அப்படி நடந்திருந்தால் மயங்கி கிடந்த அவர் கவனிப்பார் யாருமின்றி இறந்திருப்பார் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்