புலம்பெயர்ந்தோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சிறப்பு பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 200 பேர், ஜேர்மன் அரசியல்வாதிகளையும் புலம்பெயர்ந்தோரையும் கொல்ல தீட்டிய சதித்திட்டம் ஒரு முன்னாள் ராணுவ வீரரால் வெளியாகியுள்ளது.

Day X என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு நாளில், அவர்கள் புலம்பெயர்ந்தோரை கொன்று குவிக்க திட்டமிட்டிருந்ததோடு, கிரீன் கட்சி தலைவரான Claudia Roth, வெளியுறவு அமைச்சர் Heiko Mass மற்றும் முன்னாள் அதிபர் Joachim Gauck ஆகியோரையும் கொல்ல சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

ஆனால் அவர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்தும் முன் அந்த திட்டங்களை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

நாட்டில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும், வன்முறைக்கும், சமுதாயத்தில் நிலவும் அமைதியின்மைக்கும் புகலிட கோரிக்கையாளர்கள்தான் காரணம் என்று கருதும் 200 வீரர்கள் கொண்ட அந்த ராணுவ அமைப்பு, புகலிடக் கோரிக்கையாளர்களின் தலைவர்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளதாக பிரபல பெர்லின் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எப்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுமோ அந்த நாளில் இந்த தாக்குதலை அவர்கள் நடத்த திட்டமிட்டதாக தெரிய வந்துள்ளது.

இது யாரோ குடிகாரர்கள் போதையில் உளறிய வெறும் கற்பனைக் கதை என்று முதலில் எண்ணிய பொலிசார், முன்னாள் விமானப்படை மேஜர் ஒருவரை விசாரித்ததில் அந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது உண்மைதான் என்பதைக் கண்டறிந்தனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்