ஹிட்லரின் கடைசி ஆசை

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

உலக மக்களால் சர்வாதிகாரி என அறியப்படும் அடால்ப் ஹிட்லர் தனது கடைசி ஆசையை எழுதி வைத்திருந்ததாக வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

1945-ல் இறந்த ஹிட்லர், எந்த ஜேர்மன் நாட்டு மண்ணுக்காகக் கடந்த 12 ஆண்டு காலமாகப் பாடுபட்டு வந்தேனோ, அந்த ஜேர்மன் மண்ணிலேயே என்னை எரித்துவிட வேண்டும். இதுவே என் கடைசி ஆசை.

முதல் உலகப்போரில் ஒரு சாதாரணப் போர் வீரனாக கலந்துகொண்டவன் நான். ஜேர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும், பாசமும்தான் என்னை வழிநடத்தின. என்சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காகச் செலவிட்டிருக்கிறேன்.

இந்தப் போரினால் நம்நாடு சந்தித்த பயங்கர விளைவுகள், நாசமாக்கப்பட்ட பிரமாண்டமான மாளிகைகள், தரைமட்ட மாக்கப்பட்ட கலையம்சமிக்க நினைவுச் சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத் தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டு இருக்கும்” இவ்வாறு ஹிட்லர் இறுதிச் சாசனம் எழுதிக் கையெழுத்திட்டார் என்று வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்