ஜேர்மன் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்: முக்கிய குற்றவாளிகளை தேடும் பொலிஸ்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டில் Freiburg நகரில் 18 வயது இளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு மனநல மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது டிஎன்ஏ மாதிரியை வைத்து இன்னும் இரண்டு குற்றவாளிகளை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எட்டு சந்தேக நபர்களில், 19 முதல் 29 வயதுடைய அவர்கள் தற்போது காவலில் உள்ளனர், ஏழு ஆண்கள் சிரியாவிலிருந்து வந்தவர்கள் மற்றும் ஒருவர் ஜேர்மன்.

சிரியாவிலிருந்து 22 வயதுடைய முக்கியமான சந்தேக நபரை பொலிசார் தேடி வருகின்றனர். அவர் பாலியல் தாக்குதல் மற்றொரு வழக்கு தொடர்புடையவர் என பொலிசார் சந்தேகப்படுகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்