ஜேர்மனியில் திருடப்பட்ட பணம் எங்கே போனது? காட்டிக் கொடுத்த பூச்சிகள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

திருடப்பட்ட பணத்தில் இருந்த சிறு பூச்சிகள் அந்த பணத்தின் இன்னொரு பகுதி எங்கு ரகசியமாக புதைக்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க உதவிய ஆச்சரிய சம்பவம் ஒன்று தடயவியலில் பெருமளவில் உதவ இருக்கிறது.

2016ஆம் ஆண்டு ஜேர்மனியில் கொள்ளைக் கூட்டம் ஒன்று சுமார் அரை மில்லியன் யூரோக்களை கொள்ளையடித்துச் சென்றதோடு, அந்த பணத்தின் ஒரு பகுதியை பாதுகாப்பாக வெளிநாடு ஒன்றில் புதைத்து வைத்தது.

கொள்ளையர்களில் ஒருவன் பணக்கட்டுகளுடன் சிக்கியபோது மீதிப் பணத்தை ஸ்பெயினில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தான்.

என்றாலும் பொலிசார் அந்தப் பணத்தை தடயவியல் நிபுணர்களிடம் ஒப்படைத்த போது அந்த பணத்தில் இருந்த உண்ணிகள் என்று அழைக்கப்படும் சிறு பூச்சிகள் ஒரு பெரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தக் காரணமாக அமைந்தன.

அந்த பூச்சிகளை நிபுணர்கள் சோதித்தபோது அவை ஐரோப்பாவில் எங்குமே காணக்கிடைக்காத பூச்சிகள் என்பதைக் கண்டறிந்தனர்.

அதுமட்டுமில்லை அவை அவுஸ்திரேலிய ஆசிய பகுதியான குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ள பனை மரங்களில் மட்டுமே வாழும்.

இந்த கண்டுபிடிப்பு பொலிசாருக்கு இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தியது, ஒன்று அந்த திருடன் பொய் சொல்கிறான், இரண்டு மீதிப் பணம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டுள்ளது.

பின்னர் ’முறைப்படி’ விசாரித்ததில் மீதிப் பணம் தாய்லாந்தில் புதைக்கப்பட்டிருப்பதை ஒப்புக் கொண்டான் அந்தக் கொள்ளையன்.

தடயவியல் நிபுணர்களின் கண்டுபிடிப்பும் அந்த தகவலை உறுதி செய்ய உதவியது. பணம் முழுவதும் மீடகப்பட்டு விட்டது ஒரு புறம் நல்ல செய்தியாக இருக்க, இன்னொரு புறம் இந்த கண்டுபிடிப்பு குற்றவியலில் பெரும்பங்கு ஆற்ற இருக்கிறது.

அதாவது இனி, மறைத்து வைக்கப்பட்ட பணம், போதைப் பொருட்கள் ஏன் பிணங்களைக் கூட கண்டு பிடிக்க இந்த முறை பயன்பட இருக்கிறது என்பது பெரிய ஒரு கண்டுபிடிப்பாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்