ஜேர்மன் சுற்றுலாப்பயணி ஒருவர் ஜிம்பாப்வே வன விலங்குகள் பூங்கா ஒன்றில் யானைகளைப் படம் எடுக்க சென்றபோது யானை ஒன்று அவரை தாக்கியது.
49 வயதுடைய அந்த பெண் ஜிம்பாப்வேயின் Mana Pool தேசிய வன விலங்குகள் பூங்காவுக்கு சென்றிருந்தார்.
அந்த பெண் சில சுற்றுலாப்பயணிகளுடன் குழுவாக சுற்றுலா சென்றிருந்தபோது, ஒரு கூட்டம் யானைகள் வருவதை அவர்கள் கண்டனர். உற்சாகமடைந்த அந்த பெண், யானைகளை அருகில் சென்று பார்க்க ஆசைப்பட்டு அவற்றை புகைப்படம் எடுக்க முயன்றபோது ஒரு யானை அவரைத் தாக்கியது.
எதனால் அந்த யானை அந்தப் பெண்ணை தாக்கியது என்பது தெரியவில்லை. யானையால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அந்த பெண் பின்னர் உயிரிழந்தார்.
வன விலங்குகள் பூங்காவின் செய்தி தொடர்பாளரான Tinashe Farawo, சுற்றுலாப்பயணிகளை வன விலங்குகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று எப்போதுமே நாங்கள் கேட்டுக் கொள்கிறோம், அவர்கள் பாதுகாப்பான தொலைவில் நின்று வன விலங்குகளை பார்ப்பது நல்லது என்று தெரிவித்தார்.