ஜேர்மன் பைலட்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்: விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பல ஐரோப்பிய நாடுகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பிரபல விமான நிறுவனமான Ryanair, ஜேர்மன் பைலட்களையும் வேலைநிறுத்தத்தில் பங்குபெற அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, நாளை முதல் ஜேர்மன் பைலட்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதால் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பளம் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஜேர்மன் பைலட்கள் யூனியன் முடிவு செய்துள்ளது.

அதுமட்டுமின்றி Ryanair நிறுவனம் அயர்லாந்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் நிலையில், அதன் பணியாளர்கள் அயர்லாந்தில் செய்யப்படும் ஒப்பந்தங்களின் கீழ் பணி புரியாமல், அவர்கள் எந்த நாட்டில் வாழ்கிறார்களோ அந்தத்த நாடுகளிலேயே ஒப்பந்தங்கள் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஜேர்மன் பைலட்களுக்கு உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3.01 மணியிலிருந்து சனிக்கிழமை அதிகாலை 2.59 வரை வேலை நிறுத்தம் செய்ய ஜேர்மன் பைலட்கள் யூனியன் அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கனவே பெல்ஜியம், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து 150 விமானங்களை Ryanair ரத்து செய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்