ஜேர்மன் திருவிழாவில் கையில் கழுகுடன் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனின் முனிச் நகரில் நடந்து வரும் அக்டோபர் பீஸ்ட் (Oktoberfest) திருவிழாவில் பழங்கால பாரம்பரிய உடைகளை அணிந்து திருவிழாவில் குழந்தைகள் உட்பட பெரியவர்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இது 185-வது அக்டோபர் பீஸ்ட் திருவிழாவாகும்.

பழங்கால உடையுடன் கலந்து கொண்ட பார்வையாளர்கள் நடனமாடியுள்ளனர். இதில் பார்வையாளர் ஒருவர் கையில் கழுகை வைத்தபடி அக்டோபர் பீஸ்ட் திருவிழாவில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ரோலர் கோஸ்டரில் சவாரி, விதவிதமான உணவுகள் என இந்த திருவிழா களைகட்டியுள்ளது, இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதும் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக முனிச் மேயர் கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்