மீண்டும் ஒருமுறை! யூத இனப்படுகொலையை நினைவூட்டும் புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

யூத இனப்படுகொலையை நினைவூட்டும் சில அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வண்ணமூட்டப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பட்டினி கிடக்கும் யூதக்குழந்தைகள் பிச்சையெடுக்கும் மனதை உடைக்கும் ஒரு படம், கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 30 யூத பெண்களின் உடல்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு அவற்றின் அருகே ஜேர்மன் குடிமக்கள் நடக்க கட்டாயப்படுத்தப்பட்டதைக் காட்டும் ஒரு படம்,

எலும்பும் தோலுமாய் மனிதர்கள் நிற்கும் ஒரு படம், அமெரிக்கர்கள் மீட்ட ஒரு ரயில் பெட்டிக்குள் பரிதாபமாய் இறந்து கிடக்கும் மனிதர்கள் என ஒவ்வொரு படமும் மனதை உடைக்கிறது.

Weimar சித்திரவதை முகாமில் குவியலாய் கிடக்கும் பிணங்களைப் பார்வையிடும் செனேட்டர் Alben W. Barkleyயின் ஒரு படம், பின்னர் அவர் அமெரிக்க துணை ஜனாதிபதியானார்.

இன்னொரு படம் யூதர்களிடமிருந்து பிடுங்கப்பட்ட திருமண மோதிரங்களைக் காட்டுகிறது.

அவற்றிலுள்ள தங்கத்திற்காக, மோதிரங்கள், வாட்சுகள், விலை மதிப்பில்லாத கற்கள், கண்ணாடிகள் பற்களை அடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட தங்கம் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை நாஸிக்கள்.

எல்லாவற்றையும் விட கோரமான ஒரு படம் துப்பாக்கியுடன் நிற்கும் ஒருவனின் படம்.

தங்கள் சவக்குழிகளை தாங்களே தோண்டியபின் யூதர்களை நாஸிக்கள் சுட்டுக் கொல்லும் படம்தான் அது.

வண்ணமயமாக்கப்பட்டலும் அந்த படங்கள் ஒவ்வொன்றிலும் நாஸிக்களின் உண்மையான நிறமும், யூதர்களின் இரத்தத்தின் நிறமும்தான் தெரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்