ஜேர்மனியில் அகதிகள் வேட்டையாடப்படவில்லை: உளவுத்துறை தலைவரின் கருத்தால் சர்ச்சை

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் நகரமான Saxony உருவானதைக் கொண்டாடும் விதத்தில் Chemnitz நகரத்தில் நடந்த கொண்டாட்டங்களின்போது உருவான மோதலில் ஜேர்மானியர் ஒருவர் கொல்லப்பட்டார், இருவர் காயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக இரண்டு குர்திஷ் அகதிகள் கைது செய்யப்பட்டனர். 2015 அகதிகள் பிரச்சினையிலிருந்தே நாட்டில் ஏற்பட்டிருந்த பதட்டம் மீண்டும் அதிகரித்தது.

அகதிகளுக்கு எதிராக பேரணிகள் நடத்தப்பட்டன.

அதற்கு எதிராக எதிப்புப் பேரணிகள் நடத்தப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. இந்நிலையில் அகதிகள் குறிவைத்து தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியானது.

நியோ-நாஸிக் குழுக்களால் அகதிகள் வேட்டையாடப்படுவதாக செய்திகள் வெளியாகின.

Saxonyயின் பிரீமியரான Michael Kretschmer அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் அதை மறுத்த ஜேர்மன் சான்ஸலரான ஏஞ்சலா மெர்க்கல் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதை காட்டும் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் ஜேர்மன் உளவுத்துறை ஏஜன்சியின் தலைவரான Hans-Georg Maassen, அவ்வாறு வேட்டையாடப்படும் ஒரு சம்பவம் நடைபெற்றதாக நம்பத்தகுந்த தகவல் எதுவும் உளவுத்துறைக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் Thomas Oppermann என்னும் மூத்த அரசியல்வாதி, இந்த நேரத்தில் உளவுத்துறைத் தலைவர் குழப்பத்தை ஏற்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.

சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும், ஒரு கூட்டம் Social Democratகள் குண்டர்களால் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்