இன்று முதல் ஜேர்மனியில் அமுலுக்கு வரும் மாற்றங்கள்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

செப்டம்பர் பிறந்ததும் ஜேர்மனியில் பல புதிய மாற்றங்கள் அமுலுக்கு வர இருக்கின்றன.

பணியாளர்களுக்கு கொண்டாட்டம்தான்

ஜேர்மனியில் பொதுவாக பணியாளர்களுக்கு நாளொன்றிற்கு எட்டு மணி நேர வேலை அல்லது வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை.

ஓவர்டைம் பார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படும் பணியாளர்கள் இனி 11 அல்லது 12 மணி நேரம் ஓவர்டைம் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டால், காரணங்கள் கூறாமலே மறுப்பு தெரிவிக்கலாம்.

நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை விடுமுறை நாட்கள் அல்லது வார இறுதி நாட்களில் வேலை செய்யும்படி கேட்டுக் கொள்வதென்றால் ஆண்டிற்கு நான்கு முறை மட்டுமே கேட்டுக் கொள்ளலாம், அதையும் கூட பணியாளர்கள் மறுக்கலாம். ஆனால் இது சேல்ஸ் பணியாளர்களுக்கு பொருந்தாது.

கார்களுக்கான வரி கூடுகிறது

குறிப்பிட்ட சில தொழில்நுட்ப காரணங்களுக்காக கார்களுக்கான வரி 70 சதவிகிதம் வரை அதிகரிக்கிறது.

மின் சேமிப்பிற்காக ஒரு மாற்றம்

மின் சேமிப்பை மனதில் கொண்டு இனி ஹாலோஜன் விளக்குகளுக்கு அனுமதியில்லை. நாளை முதல் LED மற்றும் பிற மின் சேமிப்பு விளக்குகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி.

என்றாலும், மேஜை விளக்குகள் முதலானவற்றில் ஹாலோஜன் விளக்குகளுக்கு அனுமதி தொடர்கிறது.

ATM திருடர்களுக்கு இனி பிரச்சினைதான்

மோசடி செய்து பணம் எடுப்பவர்களை பிடிப்பதற்காக, இனி ATM வாடிக்கையாளர்கள் எடுக்க வேண்டிய தொகையை தேர்வு செய்த பிறகே PIN எண்ணை உள்ளிட வேண்டும் என்ற மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. செப்டம்பர் முதல் பாதிக்குள் இத்திட்டம் ஜேர்மனியின் அனைத்து ATMகளிலும் பயன்பாட்டுக்கு வந்து விடும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்