ஜேர்மனியில் அகதிகளுக்கு எதிராக போராட்டம்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

2015 ஆம் ஆண்டில் இருந்து ஜேர்மனிக்கு அகதிகளாக வருபவர்களுக்கு அந்நாட்டு சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்.

அகதிகள் வருகைக்கும், இங்கு அவர்கள் தங்குவதற்கும் வலதுசாரி அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கிழக்கு ஜேர்மனியின் செமின்ட்ஷ் நகரில் அகதிகள் எதிர்ப்பாளர்களுக்கும், அதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஜேர்மனைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக ஈராக் மற்றும் சிரியாவைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்