ஜேர்மனியிலிருந்து தப்பி ஓடிய அகதி: பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்தவரின் அதிர்ச்சிப் பின்னணி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

Yazidi இனத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் அகதி, தன்னை பாலியல் அடிமையாக வைத்திருந்து சித்திரவதை செய்த ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு மனிதனை இரு முறை ஜேர்மனியில் சந்திக்க நேரிட்டதால் உயிருக்கு அஞ்சி ஈராக்குக்கே ஓடி விட்டார்

Ashwaq Ta’lo என்னும் அந்த இளம் பெண் 15 வயதாக இருக்கும்போது அவளது குடும்பம் முழுவதையும் ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கினர்.

100 டொலர்களுக்கு ஐ.எஸ்ஸைச் சேர்ந்த ஒருவனுக்கு விற்கப்பட்ட அவள், அவனிடமிருந்து தப்பி, ஜேர்மனியிலிருக்கும் அவளது தாயுடன் இணைந்தாள்.

அங்கு அவள் தனது தாயாருடன் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிய நேரத்தில் ஒரு நாள் தன்னை அடிமையாக வைத்திருந்து சித்திரவதை செய்த அதே ஐ.எஸ் நபரை ஜேர்மனியில் நேருக்கு நேராக சந்தித்தாள்.

அந்த நபர் தன்னை துன்புறுத்திய நபராக இருக்க முடியாது என தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாள் Ashwaq.

ஆனால் கடந்த சில மாதங்களுக்குமுன் மீண்டும் அவள் அதே நபரை சந்திக்க நேர்ந்தது.

Abu Humam என்னும் அந்த நபர் அவளை அடையாளம் கண்டு கொண்டான்.

அவன் Ashwaqஇடம் பேச முயல, அவள் அவனை தெரியாதது போல் நடந்து கொள்ள முயன்றிருக்கிறாள்.

ஆனால், என்னிடம் பொய் சொல்லாதே என்று அவளிடம் அரபி மொழியில் கூறிய அந்த நபர் நீதான் Ashwaq என்பது எனக்கு தெரியும், அது மட்டுமில்லாமல், நீ யாருடன் வாழ்கிறாய், எந்த தெருவில் வசிக்கிறாய், எந்த பள்ளிக்கு போகிறாய் என்று எல்லாம் எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறான்.

நடுங்கிப் போன Ashwaq, இனி தன்னால் ஜேர்மனியில் வாழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டாள்.

ஜேர்மனியில் பயந்து பயந்து வாழ்வதை விட ஈராக்குக்கே சென்று அங்கு வசிக்கும் தனது தகப்பனாருடன் வாழ முடிவு செய்தாள் Ashwaq.

என்றாலும் ஈராக் புறப்படுவதற்கு முன் ஜேர்மனி பொலிசாரிடம் புகாரளித்தாள் Ashwaq.

ஆனால் பொலிசாரின் ரெக்கார்டில் Abu Humam என்னும் அந்த நபரின் பெயர் இல்லை என்பதால் அவனை பிடிப்பதில் அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

ஈராக்குக்கு புறப்பட்ட Ashwaq தற்போது தனது தந்தையுடன் குர்திஸ்தானில் வசிக்கிறார்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மனி அரசு, தங்கள் அதிகார வரம்பு ஜேர்மனிக்குள்தான் என்றும் Ashwaq ஜேர்மனிக்கு வந்தால்தான் தொடர்ந்து விசாரணை நடத்த முடியும் என்றும், அவர் ஈராக் சென்றுவிட்டதால் அவரை துன்புறுத்திய நபரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜேர்மனியில் வாழ்ந்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறும் Ashwaq, தன்னை துன்புறுத்திய நபரை ஜேர்மனியில் பார்த்த பிறகு அங்கு தன்னால் வாழமுடியாது என்றும் தான் பயத்தில் உறைந்து போனதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்