36 வயதில் கற்பை ஏலம் விட்ட பெண்ணுக்கு இத்தனை கோடியா! எவ்வளவு தெரியுமா?

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் தன்னுடைய கற்பை இணையத்தில் ஏலம் விட்டதால், அவரை 4 கோடிக்கு தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்தவர் Mandy. 36 வயதான இவர் விமானப்பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய கற்பை Cinderella Escorts என்ற இணையதளம் ஒன்றில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்துள்ளார்.

அதன் படி அவர் தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் போன்றவைகளை அதில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதையடுத்து இவரை ஜேர்மனியின் முனிச் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் £223,000(இலங்கை மதிப்பு 4,55,50,973 கோடி ரூபாய்)-க்கு வாங்கியுள்ளார்.

இது குறித்து Mandy பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், பல வருடங்களாக என்னுடைய காதலனுக்காக காத்திருந்தேன்.

ஆனால் நான் தற்போது வரை பார்க்க முடியவில்லை. வயது தான் ஆகிக் கொண்டே இருக்கிறது தவிர, எந்த ஒரு பயனும் இல்லை.

இதன் காரணமாக என்னுடைய கற்பை விற்க முடிவு செய்தேன். இதைப் பற்றி செய்திதாள்களில் படித்து தெரிந்து கொண்டேன்.

அடுத்த மாதம் அந்த நபரை சந்திக்கவுள்ளேன். இதில் வரும் பணத்தை என்னுடைய வாழ்க்கைக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது ஏராளமான இளம் பெண் பல காரணங்களுக்காக தங்களுடைய கற்பை ஏலத்தில் விடுகின்றனர்.

ஆனால் அவர்களை இந்த அளவிற்கு ஏலம் எடுக்க முன் வருவதில்லை, ஆனால் 36 வயதில் மேண்டியை இந்த அளவிற்கு ஏலம் எடுத்துள்ளதால், அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

குறித்த இணையத்தின் உரிமையாளரும், இளம் பெண்களை விட அதிக வயதுடைய பெண்களே அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்