ஜேர்மன் மருத்துவரை குத்தி கொலை செய்த சோமாலிய வாலிபர்

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

சோமாலியா நாட்டை சேர்ந்த 26 வயதான வாலிபர் ஒருவர் ஜேர்மன் மருத்துவரை குத்திகொலை செய்துள்ளார்.

Offenburg நகரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அறுசை சிகிச்சை செய்துகொண்டிருந்த மருத்துவரின் அறைக்குள் இந்நபர் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சென்றுள்ளார்.

அங்கு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவரை குத்தியதில் மருத்துவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார். மேலும் மருத்துவரின் உதவியாளரும் தாக்கப்பட்டதில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக ஜேர்மன் மருத்துவ துறைகளில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர், தற்போது இந்நபர் எதற்காக இந்த கொலை சம்பவத்தை செய்துள்ளார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்