ஜேர்மனில் குழந்தைகள் தொடர்பான தவறான புகைப்படங்களை பரப்பிய நபர்கள் கைது

Report Print Deepthi Deepthi in ஜேர்மனி

ஜேர்மனில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்து இணையதளம் ஒன்றை உருவாக்கி வருமானம் ஈட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Elysium platform என்ற தளத்தில் குழந்தைகளின் புகைப்படங்கள் மற்று வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்த தளத்திற்கு 110,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவு செய்துள்ளனர்.

இது குற்றவாளிகளால் விரும்பப்பட்ட இணையத்தளத்தின் கறுப்பு சந்தை என அழைக்கப்படுகிறது. தற்போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, வளர்ந்து வரும் குழந்தைகள் ஆபாச தளத்திற்கு ஒரு தடையாக இருக்கும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியாவில் இதுபோன்ற ஆபாச புகைப்படங்களை பரப்பிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் வயது 40 முதல் 62 வயதுக்குட்பவட்டவர்கள் ஆவார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்